Monday, July 18, 2011

////

SDPI யின் தென்சென்னை மாவட்ட செயல்வீரர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி முகாம் தென்சென்னை மாவட்டம், மயிலாப்பூர் தொகுதியிலுள்ள பட்டினம்பாக்கம் மீனவர் சமூக நலக்கூடத்தில் 17 ஜூலை 2011, காலை 10 மணிமுதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இப்பயிற்ச்சி முகாமிற்கு தென்சென்னை மாவட்டத்திற்குட்பட்ட திருவல்லிக்கேணி, எழும்பூர், அண்ணாநகர், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், ஆயிரம் விளக்கு மற்றும் வேளச்சேரி ஆகிய தொகுதிகளிலிருந்து ஏராளமான தொகுதி, வட்டம் மற்றும் கிளை நிர்வாகிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

கலந்துகொண்ட நிர்வாகிகளுக்கு பயிற்றுவிக்க, SDPI யின் தமிழ் மாநில பொது செயலாளர் திரு. ரஃபீக் அஹ்மது அவர்களும், SDPI யின் மாநில செயலாளர் திரு. G. அப்துல் சத்தார் அவர்களும், SDPI யின் தஞ்சை மாவட்ட தலைவர் மற்றும் SDPI யின் மாநில செயற்குழு உறுப்பினர் திரு. முபாரக் அவர்களும் வருகை தந்தனர்.

பயிற்சி முகாம் காலை 10 மணியளவில் துவங்கியது. வரவேற்புரையை தென்சென்னை மாவட்ட செயலாளர் திரு. முஹம்மது சாலிஹ் அவர்கள் நிகழ்த்தினார். பின்னர் SDPI யின் தொண்டர்களுக்கு பிற கொள்கையிழந்த கட்சிகளின் கொள்கைகளைப் பற்றியும், கொள்கையொன்று இருப்பதாக பீற்றிக்கொண்டு, அக்கொள்கையை தனது சுயந‌லத்திற்காக பயன்படுத்திய அக்கட்சியின் தலைவர்களை (?) பற்றியும், அவர்கள் மக்களை நட்டாற்றில் விட்ட நிலை குறித்தும் உரையாற்றினார். பின்னர் இந்திய அரசியலில் மாற்றம் காண விழையும் SDPI யின் கொள்கை குறித்த விளக்கத்தையும், SDPI யின் செயல்வீரர்களிடத்து இருக்க வேண்டிய தலைமைத்துவ பண்புகள் குறித்தும் விளக்கமளித்தார்.

பின்னர் SDPI யின் தொண்டர்களுக்கு கூட்ட மேலாண்மை குறித்த தகவல்களை SDPI யின் தஞ்சை மாவட்ட தலைவர் விளக்கினார். தொடர்ந்து மதிய உணவிற்காண இடைவெளிக்குப்பின் கட்சியின் வளர்ச்சி குறித்த குழு கலந்தாய்வு நடைபெற்றது. பின்னர் SDPI யின் தமிழ் மாநில பொது செயலாளர் திரு. ரஃபீக் அஹ்மது அவர்கள் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், உலகளாவிய எகாதியபத்தியத்தின் நிழல் தற்போது நமது நாட்டின் மீது படிந்து, நம் தேசத்தை மீண்டும் ஓர் அடிமைத்தனத்தை நோக்கி இட்டுச்செல்வதை கோடிட்டுக்காட்டினார். மேலும் 60 வருட‌ங்களுக்கும் மேலாக நமது நாட்டையும், நாட்டு மக்களையும் ஆட்சி செய்வதாக கூறிக்கொண்டு நாட்டு மக்களுக்கு இழைத்த நம்பிக்கை துரோகத்தையும் சுட்டிக்காட்டினார்.

இறுதியாக SDPI யின் தென்சென்னை மாவட்ட தொண்டர்களுக்கு கொள்கை அர்ப்பணிப்பு குறித்து SDPI யின் தஞ்சை மாவட்ட தலைவர் உரையாற்றினார். முகாமின் இறுதியாக SDPI யின் தென்சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுசைன் நன்றியுரையாற்றியதைத் தொடர்ந்து முகாம் இனிதே நிறைவுபெற்றது.
////

கான்பூர்:சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சியின் உ.பி மாநில தலைவராக வழக்கறிஞர் ஷரஃபுதீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கான்பூர் மர்ச்சண்ட் கிளப்பில் நடந்த தலைமை நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில கமிட்டி தேர்ந்தெடுக்கப்பட்டது.குர்ஷித் ஜாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.தேசிய தலைவர் இ.அபூபக்கர் கூட்டத்தை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். அப்பொழுது அவர் கூறியதாவது:இந்தியாவில் மிகவும் ஜனநாயக பண்புகளுடன் செயல்படும் கட்சி எஸ்.டி.பி.ஐ ஆகும். ஒவ்வொரு விஷயத்திலும் விரிவான விவாதங்களுக்கு பிறகு எஸ்.டி.பி.ஐ தனது கொள்கைகளை உருவாக்குகிறது. விழுமியங்களின் அடிப்படையிலான அரசியலை தான் எஸ்.டி.பி.ஐ முன்வைக்கிறது என அவர் கூறினார்.

வெறும் ஒரு அரசியல் கட்சி என்பதைவிட ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு சம வாய்ப்புகளை அளிப்பதற்கான ஒரு புனித பணியை மேற்கொண்டுள்ள குழுதான் எஸ்.டி.பி.ஐ என முடிவுரையில் எஸ்.டி.பி.ஐயின் தேசிய பொதுச்செயலாளர் எ.ஸயீத் கூறினார்.