Thursday, September 15, 2011

////
SDPI-ன் மாநிலத் தலைவர் இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் பின்வருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்

தமிழக அரசு செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கடந்த வருடங்களில் 7 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அப்போது 10 வருடங்களுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்த முஸ்லிம் சிறைக் கைதிகளுக்கு மாத்திரம் பாரபட்சத்துடன் விடுதலை மறுக்கப்பட்டது.

தற்போது அவர்கள் 13 வருடங்களுக்கு மேலாக சிறைகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் குடும்பதினர் சொல்லமுடியாத துயரத்திலும் கஷ்டத்திலும் வாழ்ந்து வருகின்றனர் .

எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கருணை உள்ளத்துடன் பரிசீலித்து வரும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 7 வருடங்களுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்த ஆயுள் கைதிகளை பொது மன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் .

அதில் முஸ்லிம் ஆயுள் கைதிகளையும் பாரபட்சமின்றி விடுதலை செய்து முந்தைய அரசு செய்த அநீதியை துடைத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார் .

Wednesday, September 14, 2011

////
திருபுவனத்தில் தி.மு.க கூட்டணி மற்றும் அ.தி.மு.க கூட்டணி ஆகியவற்றிற்கிடையே பா..க தனித்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளது. இதனிடையே திருபுவனத்தில் SDPI–ன் எழுச்சி இருபெரும் கூட்டனிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க, அ.தி.மு.க கூட்டணி கட்சிகள் கூட்டணி குழப்பத்தில் இருக்கும் சமயத்தில் SDPI–ன் செயல்வீரர்கள் தனியே தேர்தலை சந்திக்க அழகாகத் திட்டமிட்டுள்ளனர்.

திருபுவனத்தில் 2,3,4,5,8 மற்றும் 9 ஆகிய வார்டுகளிலும் பேரூராட்சி தலைவர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.
பேரூராட்சி தலைவர் பதவிக்கான SDPI–ன் வேட்பாளராக திருபுவனம் கிளைத்தலைவர் முகம்மது அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருபுவனத்தில் SDPI–ன் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.சாதாரணமாகவே மக்கள் சேவையில் ஆர்வமாக ஈடுபடும் இவர் பேரூராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என பலர் கருதுகின்றனர். மேலும் இவர் விவசாயிகள் சங்கத் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருபுவனத்தில் பெரும்பான்மையாக வாழும் சௌராஷ்டிரா சமூக மக்களுக்கும் இவர் நன்கு பரிசட்சயமானவர் என்பதால் தி.மு.க, அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வாசகர்களின் மேலான கருத்துகளை எதிர்பார்கின்றோம்....
////
நெல்லை : கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து கூடங்குளம் அருகே உள்ள இடிந்த கரை கிராமத்தில் நேற்று 11 ம் தேதி முதல் ஆயிரக்கணக்கானோர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் 12-9-11 அன்று பிற்பகல் 2:30 மணியளவில் SDPI மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடன் உண்ணா விரத பந்தலுக்கு வந்து உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் பேசியபோது, "உயிர் வாழும் உரிமைக்காக நீங்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு உண்ணாவிரதம் இருக்கின்றீர்கள். உங்களின் உண்ணாவிரத போராட்டம் வெற்றி பெற வாழ்த்துவதோடு SDPI-ன் முழு ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று கூறினார்.

அவர் உடனடியாக இந்த திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்தினார். மேலும் இந்த திட்டத்தை நிறுத்த மத்திய அரசினை தமிழக முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர் SDPI-ன் சார்பாக செப்டம்பர் 16 அன்று கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து திருநெல்வேலியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
////
சென்னை இராமநாதபுரத்தில் தியாகி இமானுவேல் சேகரனின் குரு பூஜையை முன்னிட்டு நடந்த கலவரமும் அதனால் ஏற்பட்ட உயிர் இழப்புகளும் வேதனைக்குரியது, கண்டிக்கத்தக்கது என SDPI மாநில தலைவர் KKSM தெஹ்லான் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்; “தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியனுக்கு குரு பூஜையில் கலந்து கொள்ள தடைவிதித்ததாலேயே போராட்டங்கள் நடந்து அதனால் கலவரமும் ஏற்பட்டள்ளது.

ஜான் பாண்டியனை உரிய பாதுகாப்புடன் குரு பூஜையில் பங்கேற்க அனுமதித்திருந்தால் போராட்டங்களையும், அதனால் ஏற்பட்ட கலவரங்களையும் தடுத்திருக்கலாம்.

கலவரங்களை கட்டுப்படுத்த நடந்த முயற்சியில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்திருப்பது கண்டிக்கத்தக்கது.

துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்படும் போது காவல் துறையினர் அதற்கான உரிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி உரிய முறையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் நிவாரணத் தொகை என ஜெயலலிதா அறிவித்துள்ளதை தலா 10 லட்சமாக உயர்த்தவேண்டும் என SDPI சார்பாக கேட்டுக் கொள்கிறேன்” எனவும் அவ்வறிக்கையில் அவர் தெரிவித்தார்.