Tuesday, September 20, 2011

////
சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா சார்பாக ஈகை பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 09.09.2011 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமுதாய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் SDPI ன் மாநில தலைவர் கேஎஸ் எம் தெஹ்லான் பாகவி பேசுகையில்: வருகை தந்துள்ள அனைவருக்கும் புனித ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சமுதாய மற்றும் அரசியல் தலைவர்களுக்கும், பிரமுகர்களுக்கும் மத்தியில் நெருக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் விதத்தில் SDPI இரண்டாவது வருடமாக இந்த பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறது.

SDPI துவங்கி இரண்டு வருடம் மாத்திரமே ஆகியிருந்தாலும் நாடு முழுவதும் நாங்கள் எதிர்பார்த்த வளர்ச்சியை பெற்று வருகிறது. எந்த பணபலத்தின் பின்னணியும் இல்லாமல் சமுதாய மக்களின் உதவி கொண்டு மாத்திரமே SDPI முன்னேறி வருகிறது.

SDPI துவங்கி ஒன்றரை வருடத்திலேயே தமிழக சட்ட மன்ற தேர்தலை துணிச்சலுடன் சந்தித்தது. தனித்து போட்டியிட வேண்டாம் என பலபேர் அச்சுறுத்தினாலும் துணிந்து களம் கண்டோம். அதிகமான தொகுதிகளில் போட்டியிட முடியும் எனினும் பொருளாதாரத்தை மனதில் கொண்டு 8 தொகுதிகளில் மாத்திரம் களமிறங்கினோம். தமிழகத்தில் இஸ்லாமிய சமுதாயத்தின் பின் புலம் உள்ள எந்தக் கட்சியும் எந்தக் கட்சிகளின் ஆதரவுமின்றி பெறமுடியாத வாக்குகளை SDPI பெற்றது.

SDPI பொருத்தவரை தேர்தலில் வெற்றி தோல்விகளை பற்றி கவலை படாமல் போராட்ட அரசியலையே (AGITATIVE POLITICS) முக்கியமானதாக கருதுகிறது. இன்று தேசிய அளவில் முஸ்லிம் சமுதாயம் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுவதோடு முஸ்லிம்களுக்கான சலுகைகள் நிராகரிக்கப்படுவதோடு முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு தொடர்கிறது. நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 12 பேர் பலியானதோடு 80 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை SDPI வன்மையாக கண்டிக்கிறது. இதற்கு யார் காரணம் எனினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஆனால் சம்பவம் நடந்த உடனேயே முஸ்லிம் பெயர்களை கொண்ட இளைஞர்கள் குற்றவாளிகளாக்கப்படுவதையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.

உள்துறை அமைச்சர் இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்று தெரியவில்லை. புலனாய்வு பிரிவினர் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அரபி- உர்து பெயர் கொண்ட அமைப்புகள் தான் காரணம் என எல்லா மீடியாக்களும் பகிரங்கப் படுத்துகின்றன. அஃப்சல் குருவை தூக்கிலிடக் கூடாது என்பதற்காகத்தான் இது நிகழ்த்தப்பட்டது என கூறுகின்றன. நாம் கேட்கிறோம் அஃப்சலை தூக்கிலிடுவதை நிர்பந்தப்படுத்துவதற்காக யாரேனும் இதை ஏன் நடத்தியிருக்கக் கூடாது என நாம் சந்தேகிக்கூடாது? எனவே முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற இது போன்ற தாக்குதல்களை எதிர் கொள்ள வலுவான கட்டுப்பாடான, யாருக்கும் அடிபணியாத, எதற்கும் தலை வணங்காத அனைவரையும், அனைத்து சமூகத்தையும் அரவணைத்துச் செல்லக்கூடிய ஓர் தேசிய அரசியல் கட்சி தேவை. இந்த நிர்பந்தத்திற்காக SDPI துவக்கப்பட்டுள்ளது.

இந்த சமுதாயத்திற்கெதிரான சதிகள் தமிழக அளவிலானதல்ல. இது தேசிய அளவிலானது. எனவே தேசிய அரசியல் இயக்கமான SDPI ல் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக பிற சமூக மக்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக வேண்டும். SDPI அனைத்து சமூக மக்களும் இணைந்து செயல்படும் விதத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலித்கள் - முஸ்லிம்களும் அரசியல் ரீதியாக ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக

1. தொல். திருமாவளவன் எம்.பி.,(தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி)
2. M.முஹம்மது இஸ்மாயில் எம்.ஏ, (மாநில துணைத்தலைவர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா)
3. த.வெள்ளையன் , (மாநில தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கம்)
4. அ.கு. பாத்திமா முசஃபர் (அகில இந்திய பொதுச் செயலாளர், தமிழ்நாடு தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக். )
5. A.V.Aகஸ்ஸாலி (மாநில துணைத் தலைவர் பா.ம.க)
6. K.M. சரீப்,(மாநில தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி ).
7. எ. அண்டன் கோமஸ், (தலைவர், அகில இந்திய மீனவர் சங்கம்)
8. ஐ.முஹம்மது முனீர், (மாநில துணைத்தலைவர், இந்திய தவ்ஹீத் ஜமாத்)
9. மௌலவி தர்வேஷ் ரஷாதி, (பொதுச்செயலாளர். இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம்)
10. சீமா பஷீர் (மதிமுக மாநில அமைப்பு செயலாளர். )
11. அ.ஓ. முஹம்மது ஹனீபா, (சமுதாய ஒருங்கிணைப்பாளர்)
12. தடா அப்துல் ரஹீம் , (தலைவர் இந்திய தேசிய லீக்)
13. M.G.K நிஜாமுதீன் B.L Ex M.L.A,(N.C.H.R.O மாநில துணைத் தலைவர்)
14. மேலை நாசர், (மாநில பொதுச்செயலாளர், சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை),
15. செங்கம் ஜப்பார் (முன்னாள் பால் வள வாரிய தலைவர்) ,
16. காயல் இளவரசு(தனம் வீடியோ விஷன். )
17. பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொருளாளர் அன்சர் இப்ராஹிம்,
18. மாநில செயலாளர் அன்சாரி
19. கொரியர் உரிமையாளர் நவாஸ் கனி,
20. பெரியார் தாசன் என்ற அப்துல்லாஹ்
21. முன்னாள் டி.ஐ.ஜி முஹம்மது அலி,
22. மௌலவி ஹாமித் பக்ரி,
23. தமிழ்நாடு வணிகர் சங்க பொதுச் செயலாளர் தேவராஜ்,
24. மனித உரிமை வழக்கறிஞர் புகழேந்தி,
25. தனிச்செயலாளர் சேகுவேரா,
26. அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.














Thursday, September 15, 2011

////
SDPI-ன் மாநிலத் தலைவர் இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் பின்வருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்

தமிழக அரசு செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கடந்த வருடங்களில் 7 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அப்போது 10 வருடங்களுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்த முஸ்லிம் சிறைக் கைதிகளுக்கு மாத்திரம் பாரபட்சத்துடன் விடுதலை மறுக்கப்பட்டது.

தற்போது அவர்கள் 13 வருடங்களுக்கு மேலாக சிறைகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் குடும்பதினர் சொல்லமுடியாத துயரத்திலும் கஷ்டத்திலும் வாழ்ந்து வருகின்றனர் .

எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கருணை உள்ளத்துடன் பரிசீலித்து வரும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 7 வருடங்களுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்த ஆயுள் கைதிகளை பொது மன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் .

அதில் முஸ்லிம் ஆயுள் கைதிகளையும் பாரபட்சமின்றி விடுதலை செய்து முந்தைய அரசு செய்த அநீதியை துடைத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார் .

Wednesday, September 14, 2011

////
திருபுவனத்தில் தி.மு.க கூட்டணி மற்றும் அ.தி.மு.க கூட்டணி ஆகியவற்றிற்கிடையே பா..க தனித்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளது. இதனிடையே திருபுவனத்தில் SDPI–ன் எழுச்சி இருபெரும் கூட்டனிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க, அ.தி.மு.க கூட்டணி கட்சிகள் கூட்டணி குழப்பத்தில் இருக்கும் சமயத்தில் SDPI–ன் செயல்வீரர்கள் தனியே தேர்தலை சந்திக்க அழகாகத் திட்டமிட்டுள்ளனர்.

திருபுவனத்தில் 2,3,4,5,8 மற்றும் 9 ஆகிய வார்டுகளிலும் பேரூராட்சி தலைவர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.
பேரூராட்சி தலைவர் பதவிக்கான SDPI–ன் வேட்பாளராக திருபுவனம் கிளைத்தலைவர் முகம்மது அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருபுவனத்தில் SDPI–ன் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.சாதாரணமாகவே மக்கள் சேவையில் ஆர்வமாக ஈடுபடும் இவர் பேரூராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என பலர் கருதுகின்றனர். மேலும் இவர் விவசாயிகள் சங்கத் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருபுவனத்தில் பெரும்பான்மையாக வாழும் சௌராஷ்டிரா சமூக மக்களுக்கும் இவர் நன்கு பரிசட்சயமானவர் என்பதால் தி.மு.க, அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வாசகர்களின் மேலான கருத்துகளை எதிர்பார்கின்றோம்....
////
நெல்லை : கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து கூடங்குளம் அருகே உள்ள இடிந்த கரை கிராமத்தில் நேற்று 11 ம் தேதி முதல் ஆயிரக்கணக்கானோர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் 12-9-11 அன்று பிற்பகல் 2:30 மணியளவில் SDPI மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடன் உண்ணா விரத பந்தலுக்கு வந்து உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் பேசியபோது, "உயிர் வாழும் உரிமைக்காக நீங்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு உண்ணாவிரதம் இருக்கின்றீர்கள். உங்களின் உண்ணாவிரத போராட்டம் வெற்றி பெற வாழ்த்துவதோடு SDPI-ன் முழு ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று கூறினார்.

அவர் உடனடியாக இந்த திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்தினார். மேலும் இந்த திட்டத்தை நிறுத்த மத்திய அரசினை தமிழக முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர் SDPI-ன் சார்பாக செப்டம்பர் 16 அன்று கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து திருநெல்வேலியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
////
சென்னை இராமநாதபுரத்தில் தியாகி இமானுவேல் சேகரனின் குரு பூஜையை முன்னிட்டு நடந்த கலவரமும் அதனால் ஏற்பட்ட உயிர் இழப்புகளும் வேதனைக்குரியது, கண்டிக்கத்தக்கது என SDPI மாநில தலைவர் KKSM தெஹ்லான் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்; “தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியனுக்கு குரு பூஜையில் கலந்து கொள்ள தடைவிதித்ததாலேயே போராட்டங்கள் நடந்து அதனால் கலவரமும் ஏற்பட்டள்ளது.

ஜான் பாண்டியனை உரிய பாதுகாப்புடன் குரு பூஜையில் பங்கேற்க அனுமதித்திருந்தால் போராட்டங்களையும், அதனால் ஏற்பட்ட கலவரங்களையும் தடுத்திருக்கலாம்.

கலவரங்களை கட்டுப்படுத்த நடந்த முயற்சியில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்திருப்பது கண்டிக்கத்தக்கது.

துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்படும் போது காவல் துறையினர் அதற்கான உரிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி உரிய முறையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் நிவாரணத் தொகை என ஜெயலலிதா அறிவித்துள்ளதை தலா 10 லட்சமாக உயர்த்தவேண்டும் என SDPI சார்பாக கேட்டுக் கொள்கிறேன்” எனவும் அவ்வறிக்கையில் அவர் தெரிவித்தார்.

Thursday, August 18, 2011

////
கொல்லம்: அப்துல் நாசிர் மதானியின் விடுதலைக்காக எஸ்.டி.பி.ஐ தொடர்ந்து போராடும் என அக்கட்சியின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கேரளா மாநிலம் கொல்லத்தில் வைத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து கூறினார்.

கேரளா மாநிலம் கொல்லத்தில் வைத்து எஸ்.டி.பி.ஐ சார்பாக அப்துல் நாசிர் மதானியை விடுதலை செய்யக்கோரி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அக்கட்சியின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கூறும்போது இந்தியாவில் மதானிக்கு எதிராக அநியாயம் நிகழ்த்தப்பட்டு வருகிறது என்றும் அவருடைய விடுதலைக்காக எஸ்.டி.பி.ஐ தொடர்ந்து போராடும் என தெரிவித்தார்.

நாடு முழுவதும் மதானியைப் போன்று எண்ணற்ற அப்பாவிகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்கள். அதிலும் அவர்கள் விசாரணை கைதிகளாகவே சிறையில் பல வருடங்களாக இருந்து வருகிறார்கள்.

இந்தியாவில் வாழக்கூடிய 20 கோடி முஸ்லிம்களும் ஏதாவது ஒரு வழியில் அரசாங்க அதிகாரிகளாலும், அரசியல்வாதிகளாலும் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். 1998 ஆம் ஆண்டு கோவை சிறைச்சாலையில் இருந்து மதானியை விடுதலை செய்யக் வலியுறுத்தி நாம் முதன் முதலாக போராட்டத்தில் ஈடுபட்டபோது ஒரு போராளியை விடுதலை செய்வதற்காக இன்னொரு முயற்ச்கிக்கிறார் என சிலர் நம்மை பார்த்து விமர்சனம் செய்தனர். அவர்கள் அதனை மறந்திருக்கலாம், நாம் அதை மறக்கவில்லை அதே சமயம் அவர்கள் மீது எந்த தவறான அபிப்ராயமும் கொள்ளவில்லை. கோயம்புத்தூர் குண்டு வெடிப்பின் போது தவறுதலாக குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டு இன்று வரை சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மதானியை விடுதலை செய்வதற்காக ரூபாய் 34 லட்சம் வசூலித்து கிட்டத்தட்ட 37 லட்ச ரூபாய் செலவழித்ததை நினைவு கூறினார். எஸ்.டி.பி.ஐ மதானி போன்று இன்று பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் வாடும் அப்பாவி மக்களின் விடுதலைக்க்காக சட்டப்படி போராடும் என்று அவர் தெரிவித்தார். இந்துத்துவ தீவிரவாதிகள் நடத்திய மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கித்தவிக்கும் அப்பாவி மக்களுக்காகவும் எஸ்.டி.பி.ஐ போராடும் என்று தெரிவித்தார்.

நமது நாட்டில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவு, ஆதிவாசி மக்களை மாவோயிஸ்டுகளாகவும் சித்தரிக்கப்பட்டு வருகின்றனர். வருங்கால இந்தியாவின் கட்சியாக எஸ்.டி.பி.ஐ உருவெடுக்கும். அதன் வேக வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்தி விட முடியாது என இ.அபூபக்கர் கூறினார்.

எஸ்.டி.பி.ஐன் மாநிலத் தலைவர் நஸ்ருதீன் இளமரம், பி.டி.பி கட்சியின் துணைத்தலைவர் வரக்கல ராஜ், வரலாற்றாசிரியர் ஜெய் பிரகாஷ், மூவாத்துபுழா எஸ்.டி.பி.ஐ தலைவர் அஷ்ரஃப் மெளலவி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்திற்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Wednesday, August 10, 2011

////
சென்னை: சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) சார்பாக சென்னை மண்ணடியில் கலெக்டர் அலுவலகம் அருகில் சுப்பிரமணிய சுவாமியை கண்டித்து நேற்று திங்கட்கிழமை மாலை 3:30 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனதா கட்சியின் தலைவரும் ஃபாஸிச சிந்தனை கொண்டவருமான சுப்பிரமணிய சுவாமி டி.என்.ஏ என்ற பத்திரிக்கையில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை கருவருப்பது எப்படி? என்ற தலைப்பில் கட்டுரையை எழுதியிருந்தார். தீவிரவாதத்தை ஒழிக்க என்ன வழி? என்று தலைப்பிட்டு விட்டு அதில் முஸ்லிம்களுக்கு ஓட்டுரிமை வழங்கக்கூடாது என்றும் முஸ்லிம்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும், இந்தியாவில் உள்ள 300 மஸ்ஜிதுகளை இடிக்க வேண்டும் அதில் முதலாவதாக காசியிலுள்ள மஸ்ஜிதை இடிக்க வேண்டும் என்றும் விஷமத்தனமான‌ கருத்துக்களை எழுதியுள்ளார். இதனை கண்டித்து தேசிய சிறுபான்மை கழகம் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் சென்னை மாவட்ட SDPI சார்பாக சென்னை மண்ணடியில் சுப்பிரமணிய சுவாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன கூட்டத்திற்கு SDPI-யின் வடசென்னை மாவட்ட பொதுச்செயலாளர் ரஷீத் அவர்கள் தலைமை தாங்கினார். SDPI-யின் மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணன் ரத்தினம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுஸைன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் ஜாகிர் ஹுஸைன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். இறுதியாக திருவள்ளூர் மாவட்ட பொதுச்செயலாளர் ஹஸன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். திறளான மக்கள் கலந்து கொண்டு கண்டன குரல் எழுப்பினர்.

Sunday, August 7, 2011

////


ஹுப்லி : 250 பெண்கள் சமீபத்தில் அமன் ஹால்-ல் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI) -ல் இணைந்தனர்.

பெண் தொண்டர்கள் கர்நாடக மாநிலத் தலைவர் அப்துல் மஜீது , பொது செயலாளர் அஃப்சர் பாஷா, ஹுப்லி மாவட்ட தலைவர் அமன் கலேகர் முன் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.