Wednesday, August 10, 2011

////

சுப்பிரமணிய சுவாமியை கண்டித்து எஸ்.டி.பி.ஐயினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) சார்பாக சென்னை மண்ணடியில் கலெக்டர் அலுவலகம் அருகில் சுப்பிரமணிய சுவாமியை கண்டித்து நேற்று திங்கட்கிழமை மாலை 3:30 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனதா கட்சியின் தலைவரும் ஃபாஸிச சிந்தனை கொண்டவருமான சுப்பிரமணிய சுவாமி டி.என்.ஏ என்ற பத்திரிக்கையில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை கருவருப்பது எப்படி? என்ற தலைப்பில் கட்டுரையை எழுதியிருந்தார். தீவிரவாதத்தை ஒழிக்க என்ன வழி? என்று தலைப்பிட்டு விட்டு அதில் முஸ்லிம்களுக்கு ஓட்டுரிமை வழங்கக்கூடாது என்றும் முஸ்லிம்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும், இந்தியாவில் உள்ள 300 மஸ்ஜிதுகளை இடிக்க வேண்டும் அதில் முதலாவதாக காசியிலுள்ள மஸ்ஜிதை இடிக்க வேண்டும் என்றும் விஷமத்தனமான‌ கருத்துக்களை எழுதியுள்ளார். இதனை கண்டித்து தேசிய சிறுபான்மை கழகம் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் சென்னை மாவட்ட SDPI சார்பாக சென்னை மண்ணடியில் சுப்பிரமணிய சுவாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன கூட்டத்திற்கு SDPI-யின் வடசென்னை மாவட்ட பொதுச்செயலாளர் ரஷீத் அவர்கள் தலைமை தாங்கினார். SDPI-யின் மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணன் ரத்தினம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுஸைன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் ஜாகிர் ஹுஸைன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். இறுதியாக திருவள்ளூர் மாவட்ட பொதுச்செயலாளர் ஹஸன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். திறளான மக்கள் கலந்து கொண்டு கண்டன குரல் எழுப்பினர்.

0 Reactions to this post

Add Comment

    Post a Comment