Thursday, August 2, 2012

////

இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை (30/08/2012) இரவு 9.00 மணிக்கு தமிழன் டிவியில் MRF வழங்கும் விடியலை நோக்கி நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழாவில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் K.K.S.M.தொஹ்லான் பாகவி ஆற்றிய சிறப்புரையின் தொகுப்பை காணத்தவறாதீர்கள்.....

தமிழன் டிவி வலைத்தளம் : www.tamilantelevision.com



Wednesday, July 4, 2012

////
////

பள்ளி கல்வி கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவிக்கு தஞ்சை மாவட்ட எஸ்.டி.பி.ஐ-யின் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
தஞ்சை மாவட்ட தலைவர் குடந்தை இப்ராஹிம் கல்வி உதவித் தொகையை வழங்கினார்.

Monday, June 4, 2012

////
 01.06.2012 வெள்ளிக்கிழமை சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) சார்பில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்பப்பெற கோரியும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சை 

மதுரை
கோவை 

சேலம்
 
ஈரோடு 
ராம்நாடு
கடலூர் 




Friday, June 1, 2012

////




பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும் விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும் 31-05-2012 அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் SDPI  ரயில் மறியல் போராட்டத்தை நடத்தியது.இதில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

Thursday, May 31, 2012

////
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கோவை ஆத்துப்பாலத்தில் பாலக்காடு செல்லும் சாலையில் SDPI சார்பாக சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

இதற்கு மாவட்டத்தலைவர் பீர் முஹம்மது தலைமை தாங்கினார், மாநில செயற்குழு உறுப்பினர் சிவக்குமார்,அன்சர் ஷெரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 90 பேர் வரை கலந்துகொண்டனர்.
.
மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.



Tuesday, May 29, 2012

////

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சென்னை மாநகர SDPI ரயில் மறியல் போராட்டத்தை அறிவிதுள்ளது.

நாள் : 31-05-2012.
நேரம் : காலை 11 மணி.
இடம் : சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்.  

Sunday, May 27, 2012

////

     SDPI-ன் தஞ்சை மாவட்ட பொதுக்குழு 27-05-12 அன்று கும்பகோணம் A.M.மஹாலில் மாலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலச்செயலாளர் K.S.இப்ராஹிம் அவர்கள் கலந்துகொண்டார்கள். இதில் தஞ்சை மாவட்ட தொகுதி, நகர மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    இக்கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்திற்கான புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இதன்படி 

  • மாவட்டத்தலைவர் -இப்ராஹிம் (கும்பகோணம்)
  • மா.து.தலைவர் – அன்சாரி (ஆவூர் )
  • மா.பொ.செயலாளர் – முஹமது ஃபாருக் (ராஜகிரி)
  • மா.செயலாளர் – தாஜ் (மேலக்காவேரி)
  • மா.செயலாளர் – முஹமது காலித் (திருமங்கலக்குடி)
  • மா.பொருளாளர் – ஷரீஃப் (ராஜகிரி)


     புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவாட்டத்தலைவர் இப்ராஹிம் அவர்கள் நமது தளத்திற்கு அளித்த பேட்டியில் இன்ஷா அல்லாஹ் இன்னும் மூன்று மாதங்களில் SDPI–ன் கிளைகள் குறைந்தபட்சம் 15 ஊர்களில் அமைக்கப்படும் என்றும் SDPI–ன் தொழிற்சங்க பிரிவான SDTU மாவட்டமெங்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார்.மேலும் SDTU–க்கான மாவட்ட கமிட்டி விரைவில் அமைக்கப்படும் என்றும் அவர் தனது பேட்டியில் கூறினார்.

புதிய நிர்வாகிகள் திறம்பட செயல்பட நமது வாழ்த்துக்கள்.



Saturday, May 26, 2012

////
மத்திய அரசு பெட்ரோல் விலையை இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.7 .50 உயர்த்தியிருப்பது மிகுந்த கண்டனத்திற்கு உரியது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் விழிபிதிங்கி நிற்கும் பொது மக்களை, இது மேலும் வாட்டி வதைக்கும். மத்திய அரசு எவ்வித சால்ஜாப்புகளையும் சொல்லி கொண்டு இருக்காமல் விலை உயர்வை முழுமையாக திரும்ப பெற வேண்டும்.

மத்திய அரசு தனக்கு இதில் சம்பந்தம் இல்லை, எண்ணெய் நிறுவனங்கள்தான் விலை உயர்வை அறிவித்து இருக்கின்றன என கூறுவது பிள்ளையை கில்லி விட்டு தொட்டிலை ஆட்டும் கதையாகும். மத்திய அரசு விலை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிருவனங்களிடமிருந்து தனது கட்டுப்பாட்டில் திரும்ப கொண்டு வர வேண்டும்.

மத்திய அரசை கண்டித்தும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஜூன் 1 அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களில் SDPI சார்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று SDPI தமிழ்நாடு மாநிலத்தலைவர் K.K.S.M .தெஹ்லான் பாகவி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Friday, May 25, 2012

////
கீழக்கரையில் SDPI கட்சியின் கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் தெரு முனைக்கூட்டம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போது இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்-ஐ சேர்ந்த ஜகாங்கீர் ஆலீம் அவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி SDPI மாநிலத் தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி அவர்களது முன்னிலையில் SDPI -ல் இணைந்தார்கள்.

   



////

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில், நெல்லையில் மட்டும் 24 பேர் நோய் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நம் கீழக்கரை அருகே உள்ள நத்தம் குளபதம் கிராமத்திலும் டெங்கு காய்ச்சல் பரவி 30க்கும் மேற்பட்டோர் 
பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

        இதனால் கீழக்கரை நகர மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த நோய் சிறு குழந்தைகளை அதிகம் தாக்குவதால், தற்சமயம் நம் பகுதி சிறு பிள்ளைகளுக்கு காய்ச்சல் வந்தாலே டெங்கு காய்ச்சலாக இருக்குமோ என அஞ்சி தாய்மார்கள் வருகின்றனர். நம் பகுதி மருத்துவர்களும், காய்ச்சலால் அவதிப்படும் அனைத்து குழந்தைகளுக்கும் டெங்கு காய்ச்சலுக்கான இரத்த பரிசோதனை செய்து வருகின்றனர்.
        இந்நிலையில் கீழக்கரை நகர் சோசியல் டெமோக்ரடிக் பார்ட்டியினர் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலும், டெங்கு பரவாத வண்ணம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும்  அனைத்து தெருக்களிலும், கை ஒலிப்பெருக்கி மூலம் சிறப்பாக பிரச்சாரம்  செய்து வருகின்றனர். இதனை கீழக்கரை நகர் தலைவர் செய்யது அபுதாகிர் அவர்கள் முன்னிலை ஏற்று நடத்தி வருகிறார்.



////

விலைவாசி உயர்வை கண்டித்தும் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் தமிழ்நாடு மாநில தலைவர் கே கே எஸ்எம் தெஹ்லான் பாகவி வெளியிட்ட கண்டன அறிக்கையில், 

மத்திய அரசு பெட்ரோல் விலையை வரலாறு காணாத அளவில் 7 ரூபாய் 50 காசுகள் உயர்த்தி பொதுமக்களின் மீது கொடூரமான தாக்குதலை நிகழ்த்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் மாத்திரம் 17 முறை பெட்ரோலிய பொருட்களின் மீது விலை உயர்வை அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தும், வங்க தேசம் உள்ளிட்ட சிறிய நாடுகளே அதனை சமாளித்து இந்தியாவை விட குறைந்த விலையில் பெட்ரோல் விற்பனை செய்கின்றன. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்ததற்கு மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே காரணம். அதன் சுமையை மக்களிடம் திணிப்பது நியாயம் இல்லை.

பெட்ரோல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் பன் மடங்கு உயரும். ஏற்கனவே மத்திய மாநில அரசுகளின் தவறான பொருளாதார கொள்கையினால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ள நிலையில் இந்த விலை உயர்வு அறிவிப்பு மக்களுக்கு பேரிடியாகவே அமையும்.

இது போன்ற விலை உயர்வு அறிவிப்புகள் மீண்டும் மதவாத பாஜக வை ஆட்சியில் அமர்த்தவே உதவும் என்பதை காங்கிரஸ் உணர்ந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கேற்ப பெட்ரோலிய பொருட்களின் விலையை மாற்றி அமைக்கும் உரிமையை மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும்.

தாறுமாறாக விலை உயர்வை அறிவித்துவிட்டு மக்கள் கொந்தளிக்கும் போது, சிறிய அளவிலான விலை குறைப்பு நடவடிக்கையை அறிவித்து மக்களை ஏமாற்றும் போக்கை இம்முறை மத்திய அரசு செய்யாமல் முற்றிலுமாக இந்த விலை ஏற்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்.

மத்திய அரசின் இந்த மக்கள் விரோத விலை ஏற்ற அறிவிப்பை கண்டித்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து மக்களை ஒன்று திரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். எஸ்.டி.பி.ஐ மத்திய அரசின் இந்த விலை ஏற்ற அறிவிப்பை எதிர்த்து தொடர்ந்து போராடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, May 23, 2012

////
              எம்மிகனூர்  (கர்னூல்: 22-05-2012 அன்று SDPI-ன் வேட்பாளர் முகம்மது யூசுப் அவர்கள் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.அப்பொழுது SDPI-ன் தேசியத் தலைவர் E.அபூபக்கர் அவர்கள் உடன் இருந்தார்.அவர் தனது பேட்டியில் SDPI முஸ்லிம்களுக்கான கட்சி மட்டும் அல்ல மாறாக அனைத்து சமூக மக்களுக்கான கட்சி என்று குறிப்பிட்டார். தமிழ்நாடு , கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் SDPI தேர்தலை ஏற்கனவே சந்தித்துள்ளது என்றும் ஆந்திராவில் இந்த இடைத்தேர்தல் மூலம் முதல் முறையாக தேர்தலை சந்திக்க உள்ளது என்றும் குறிப்பிட்டார்.மேலும் அவர் தமது கட்சியின் கொள்கைகள் பற்றி அறிந்து தங்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு  கேட்டுக்கொண்டார்.

                                  SDPI வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் ஊர்வலம் 
////
கூடங்குளம் போராட்டம் - மக்களின் கோரிக்கைகளுக்கு மத்திய மாநில அரசுகள் செவி சாய்க்க வேண்டும். போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை எந்த நிபந்தனையுமின்றி திரும்பப் பெற வேண்டும்.
மே 25ல் SDPI சென்னையில் ஆர்ப்பாட்டம்


கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த 6 மாத காலமாக தன்னெழுச்சியோடு போராடி வருகின்றனர். 



உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் அணு உலையை மூடிவரும் நிலையில், உலகம் அணு உலையின் ஆபத்துக்களை கண்டு வரும் இத்தருணத்தில் மக்களின் அச்சம் இயற்கையானதே!



பொதுமக்கள் மாத்திரமின்றி நாடு முழுவதும் முன்னாள் நீதிபதிகள், உயர் பதவி வகித்த அதிகாரிகள், முன்னாள் இராணுவத்தளபதிகள், விஞ்ஞானிகள், சமூக, அரசியல் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என அணு உலைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் அணி திரண்டு வருவது போராட்டக்காரர்களின் கோரிக்கைகளின் நியாயத்தை உணர்த்துகிறது. 



ஜனநாயக ரீதியாக போராடி வரும் மக்களின் நியாயமான கோரிக்கைகளை புறக்கணிப்பதும், அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதும், வழக்குகள் தொடுப்பதும் ஜனநாயக அரசுகளுக்கு உகந்ததல்ல.


 
எனவே கூடங்குளம் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய மாநில அரசுகள் செவி சாய்க்க வேண்டும். பழி வாங்கும் நோக்குடனும், அரசியல் ரீதியாகவும் போராட்டக்காரர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் எந்த நிபந்தனையுமின்றி அரசு திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். 



இக் கோரிக்கைகளை வலியுறுத்தி மே-25ல் சென்னை மெமோரியல் ஹால் முன்பு மாலை 4 மணியளவில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகிறது. நீதிக்கான இப்போராட்டத்தில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். 



இப்படிக்கு
கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி
மாநில தலைவர் 
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா 

தமிழ்நாடு



Tuesday, May 22, 2012

////
          பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை குஜராத்தில் பாஜக ஆட்சியின்கீழ் சோதனைக்கூடத்தில் கொன்று குவித்து விட்டு பாவக்கறையை போக்க முஸ்லிம்களை ஒருசில பதவிகளில் அமர்த்தியும் தொப்பி அணிந்த ஒருசிலருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து அழகு பார்த்து அதே சோதனையை மீண்டும் கர்நாடகத்திலும் நடத்தபட உள்ளது என்பதற்கு பல அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளது.

          சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் பகல்கொட்டா மாவட்டத்திலுள்ள தவலேஷ்வர என்ற ஊரிலுள்ள வக்ப் வாரியத்திற்கு சொந்தமான பள்ளிவாசல், உர்து பள்ளிக்கூடம் மற்றும் அடக்கஸ் ஸ்தலத்தை இடித்து தள்ளி ஆக்கிரமிக்கும் எண்ணத்துடன் சங்க மதபிரிவினைவாத கூட்டம் கங்கணம் கட்டி வருகிறது.

       அதிர்ச்சியடைந்த முஸ்லிம்கள் வக்ப் செயயப்பட்ட பொது சொத்துக்களை பாதுகாக்கவும் இந்தியாவின் மதசார்பின்மையை பாதுகாக்கவும் வேண்டி பள்ளிவாசல் ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே சங்க பரிவார கும்பல், முஸ்லிம்கள் மீது அவதூறு பிரசாரத்தை தொடங்கி, ஆண்டாண்டுகாலம் நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வரும் சமூகங்களிடையே மதபிரிவினைவாத உணர்வுகளை தூண்டி வருகிறது. பள்ளிவாசல் இடத்தில் தான் சாலை அமைக்கவேண்டும் என்றும் அதற்கு முஸ்லிம்கள் சம்மதிக்காவிட்டால் அவர்கள் கடைகளில் பொருட்கள் வாங்கக்கூடாது விற்கக்கூடாது என்ற மதவாத பிரசாரமும் செய்ய தொடங்கியுள்ளது .

      சங்கபரிவாரத்தின் இந்த சமூக பகிஷ்கார பிரிவினைவாத பிரசாரத்தை எதிர்த்து சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா தலைமையில் சிந்தகியில் உள்ள திப்பு சுல்தான் சதுக்கத்தில் இருந்து தொடங்கிய மக்கள் பேரணி மாநில கவர்னருக்கு புகார் கடிதம் தாஷில்டார் வாயிலாக சமர்பிக்கப்பட்டது . மாவட்ட தலைவர் அப்துல் ஹமீது அவாதி மற்றும் மாவட்ட கமிட்டி உறுப்பினர் மொய்னுதீன் ஆகியோர் தலைமை தாங்கி போராட்டத்தை வழிநடத்தினர்.


Monday, May 21, 2012

////

             நெல்லை மாவட்டம், பத்தமடை பேரூராட்சி, 4வது வார்டு பகுதியில் உள்ள ஒரு சாலை பல வருடமாக சீரமைக்கப்படாமல் இருந்தது , பல வருட காலமாக கோரிக்கை வைத்தும் சீரமைக்கபடாமல் இருந்தது , இந்த நிலையில் கடந்த ஆறு மாதம் முன்பு பதவி ஏற்ற SDPI வார்டு உறுப்பினர் ஹசன் காதர் கவனித்திற்கு இந்த பிரச்சனை கொண்டு செல்லபட்டது, அவர் தன்னுடைய அயராது முயற்சியால் பல சிரமங்களை மேற்கொண்டு சாலையை சீரமைத்தார் மேலும் அவர் கூறுகையில் நான் இது மட்டும் அல்லாமல் என்னால் முடிந்த அளவு இந்த பகுதிக்கு என்ன தேவையோ அது எல்லாவற்றையும் நான் செய்து கொடுப்பேன் எனக்கூறினார். அவரது பொதுப்பணி மேலும் தொடர நாம் அவரை வாழ்த்துவோமாக...