எம்மிகனூர் (கர்னூல்) : 22-05-2012 அன்று SDPI-ன் வேட்பாளர் முகம்மது யூசுப் அவர்கள் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.அப்பொழுது SDPI-ன் தேசியத் தலைவர் E.அபூபக்கர் அவர்கள் உடன் இருந்தார்.அவர் தனது பேட்டியில் SDPI முஸ்லிம்களுக்கான கட்சி மட்டும் அல்ல மாறாக அனைத்து சமூக மக்களுக்கான கட்சி என்று குறிப்பிட்டார். தமிழ்நாடு , கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் SDPI தேர்தலை ஏற்கனவே சந்தித்துள்ளது என்றும் ஆந்திராவில் இந்த இடைத்தேர்தல் மூலம் முதல் முறையாக தேர்தலை சந்திக்க உள்ளது என்றும் குறிப்பிட்டார்.மேலும் அவர் தமது கட்சியின் கொள்கைகள் பற்றி அறிந்து தங்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
SDPI வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் ஊர்வலம்
0 Reactions to this post
Add CommentPost a Comment