Monday, June 27, 2011

////

SDPI-ன் மாநிலத்தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

மத்திய அரசு சமையல் எரிவாயு, டீசல், மண்ணென்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது அத்தியாவசிய பொருள்களின் விலையை பன்மடங்கு அதிகரிப்பதற்கு காரணமாக அமையும். மத்திய அரசு நேற்று முன்தினம் மண்ணென்ணெய்,டீசல் ஆகியவற்றின் விலையை இரண்டு ரூபாய், சமையல் எரிவாயு விலையை 50 ரூபாய் உயர்த்தியிருப்பது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயினுடைய விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டுவதற்காக இந்த விலை உயர்வு என்று காரணம் சொல்லப்படுகிறது. அதே சமயம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயினுடைய விலை குறையும்போது பெட்ரோலிய பொருள்களின் விலையை குறைப்பதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கச்சா எண்ணெய் விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை வேறு வழிகளில் அதை சரி செய்ய வேண்டுமே தவிர பொதுமக்களின் தலையில் சுமத்துவது நாட்டு மக்களுக்கு மத்திய அரசு இழைக்கும் அநீதியாகும். மத்திய அரசு உடனடியாக பெட்ரோலிய பொருள்களின் விலையை திரும்பப்பெற வேண்டும். தமிழக அரசு பெட்ரோலிய பொருள்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசின் பெட்ரோலிய பொருள்களின் மீதான வரியை வாபஸ் பெறவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

Sunday, June 26, 2011

////
புதுடெல்லி : டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெறவேண்டுமென சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) கோரிக்கை விடுத்துள்ளது.

அத்தியாவசியப்பொருட்களின் விலை உயர்வால் மக்கள் துயரத்தை அனுபவிக்கும்பொழுது மத்திய அரசு திமிராக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 50 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 3 ரூபாயும், மண்ணெண்ணெய் லிட்டருக்கு இரண்டு ரூபாயும் விலையை உயர்த்தியுள்ளது என எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் சுட்டிக்காட்டினார்.

தற்போது பணவீக்கம் 9 சதவீதத்தை கடந்துள்ளது.பொருட்களை கொண்டு செல்லும் போக்குவரத்திற்கு 65 சதவீத பயன்பாடும் டீசல் என்பதால் அத்தியாவசியப்பொருட்களின் விலை தாங்கமுடியாத அளவு உயரும்.ஏழைகளும், சாதாரண மக்களும் இதனால் துயரத்தை அனுபவிக்கவேண்டிய சூழல் ஏற்படும்.போக்குவரத்துக்கட்டணம் அதிகரிக்கும்.சாதாரண மக்களால் தாங்கமுடியாததுதான் சமையல் எரிவாயுவின் விலை உயர்வு.மண்ணெண்ணெய் விலையை உயர்வும் ஏழையைத்தான் பாதிக்கும் என இ.அபூபக்கர் சுட்டிக்காட்டினார். கடந்த ஆண்டு ஜுன் மாதம் அரசு டீசல் விலையை இரண்டு ரூபாயும், சமையல் எரிவாயுவின் விலையை 35 ரூபாயும் உயர்த்தியது. ஒரு வருடம் முடிவதற்குள்ளாக மீண்டும் மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. விலை உயர்வை வாபஸ் பெறாவிட்டால் எஸ்.டி.பி.ஐ வலுவான போராட்டங்களை நடத்தும் என இ.அபூபக்கர் கூறினார்.
////
24-6-11 வெள்ளிக்கிழமை தஞ்சை மாவட்டம் SDPI திருபுவனம் கிளையில் தேர்வு செய்யப்படாமல் இருந்த கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தேர்தல் அதிகாரியாக மாவட்டத் தலைவர் முஹம்மது ஃபாரூக் கலந்து கொண்டு தேர்தலை சிறப்பாக நடத்தினார். இந்த தேர்தலில் கிளைக்கான துணைத்தலைவர் ,இணைச்செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இந்த தேர்தலில் கிளையின் செயல்வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று கிளை நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தனர்.

புதிய நிர்வாகிகள் :-
H.ஹாஜி முஹம்மது (துணைத்தலைவர்)
M.ஹிசாமுதீன் (இணைச்செயலாளர்)
R.முஹம்மது அஸ் (பொருளாளர்)

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் கூறுகையில் கிளையில் செயல்வீரர்களை அதிகப்படுத்தவும் , வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் திருபுவனத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் SDPI-ன் சார்பாக வேட்பாளர்களை நிறுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றனர். மேலும் திருபுவனத்தில் பொதுமக்களுக்கு உள்ள பிரச்சனைகள் ஆராய்ந்து அவற்றை சரிசெய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.