Sunday, June 26, 2011

////

டீசல்,சமையல் எரிவாயு,மண்ணெண்ணெய் விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெறவேண்டும்

புதுடெல்லி : டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெறவேண்டுமென சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) கோரிக்கை விடுத்துள்ளது.

அத்தியாவசியப்பொருட்களின் விலை உயர்வால் மக்கள் துயரத்தை அனுபவிக்கும்பொழுது மத்திய அரசு திமிராக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 50 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 3 ரூபாயும், மண்ணெண்ணெய் லிட்டருக்கு இரண்டு ரூபாயும் விலையை உயர்த்தியுள்ளது என எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் சுட்டிக்காட்டினார்.

தற்போது பணவீக்கம் 9 சதவீதத்தை கடந்துள்ளது.பொருட்களை கொண்டு செல்லும் போக்குவரத்திற்கு 65 சதவீத பயன்பாடும் டீசல் என்பதால் அத்தியாவசியப்பொருட்களின் விலை தாங்கமுடியாத அளவு உயரும்.ஏழைகளும், சாதாரண மக்களும் இதனால் துயரத்தை அனுபவிக்கவேண்டிய சூழல் ஏற்படும்.போக்குவரத்துக்கட்டணம் அதிகரிக்கும்.சாதாரண மக்களால் தாங்கமுடியாததுதான் சமையல் எரிவாயுவின் விலை உயர்வு.மண்ணெண்ணெய் விலையை உயர்வும் ஏழையைத்தான் பாதிக்கும் என இ.அபூபக்கர் சுட்டிக்காட்டினார். கடந்த ஆண்டு ஜுன் மாதம் அரசு டீசல் விலையை இரண்டு ரூபாயும், சமையல் எரிவாயுவின் விலையை 35 ரூபாயும் உயர்த்தியது. ஒரு வருடம் முடிவதற்குள்ளாக மீண்டும் மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. விலை உயர்வை வாபஸ் பெறாவிட்டால் எஸ்.டி.பி.ஐ வலுவான போராட்டங்களை நடத்தும் என இ.அபூபக்கர் கூறினார்.

0 Reactions to this post

Add Comment

    Post a Comment