Friday, May 25, 2012

////

கீழக்கரையில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் - SDPI கட்சியினர் முயற்சி !


தமிழகத்தின் தென்மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில், நெல்லையில் மட்டும் 24 பேர் நோய் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நம் கீழக்கரை அருகே உள்ள நத்தம் குளபதம் கிராமத்திலும் டெங்கு காய்ச்சல் பரவி 30க்கும் மேற்பட்டோர் 
பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

        இதனால் கீழக்கரை நகர மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த நோய் சிறு குழந்தைகளை அதிகம் தாக்குவதால், தற்சமயம் நம் பகுதி சிறு பிள்ளைகளுக்கு காய்ச்சல் வந்தாலே டெங்கு காய்ச்சலாக இருக்குமோ என அஞ்சி தாய்மார்கள் வருகின்றனர். நம் பகுதி மருத்துவர்களும், காய்ச்சலால் அவதிப்படும் அனைத்து குழந்தைகளுக்கும் டெங்கு காய்ச்சலுக்கான இரத்த பரிசோதனை செய்து வருகின்றனர்.
        இந்நிலையில் கீழக்கரை நகர் சோசியல் டெமோக்ரடிக் பார்ட்டியினர் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலும், டெங்கு பரவாத வண்ணம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும்  அனைத்து தெருக்களிலும், கை ஒலிப்பெருக்கி மூலம் சிறப்பாக பிரச்சாரம்  செய்து வருகின்றனர். இதனை கீழக்கரை நகர் தலைவர் செய்யது அபுதாகிர் அவர்கள் முன்னிலை ஏற்று நடத்தி வருகிறார்.



0 Reactions to this post

Add Comment

    Post a Comment