Sunday, August 7, 2011

////

SDPI யின் மாநிலத் தலைவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு 3.8.2011 சட்டசபையில் தாக்கல்செய்துள்ள 2011-12 ம் ஆண்டிற்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையில் உலமா ஓய்வூதியம் உயர்த்தப்பட்டிருப்பதும் , விவசாயம் மற்றும் அணைகள் பராமரிப்பிற்கு அதிக கவனம்செலுத்தப்பட்டிருப்பதும், ஏழைக்குடும்பங்களுக்கு ஆடுகள் மற்றும் கறவை மாடுகள் இலவசமாக வழங்குவது பற்றிய அறிவிப்பும், வரவேற்றகத்தக்கது, பாரட்டிற்குரியது. அதேசமயம் சமச்சீர் கல்வி பற்றி எதுவும் கூறாததும், விலை வாசியை கட்டுப்படுத்துவது பற்றிய அறிவிப்புகள் இல்லாததும், தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் வாக்குறுதியளித்தபடி முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்துவது பற்றிய அறிவிப்பு இல்லாததும், கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பில் பின் தங்கியுள்ள முஸ்லிம்களுக்கான நலத்திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் இல்லாததும் ஏமாற்றம் அளிக்கிறது. இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

0 Reactions to this post

Add Comment

    Post a Comment