Tuesday, June 21, 2011

////

தமிழ் மாநிலத்தலைவர் சென்னையில் நிருபர்களிடம் பேட்டியளித்தார்

SDPI- ன் மாநிலத்தலைவர் 18:06:2011- அன்று காலை 10.30 மணிக்கு சென்னையில் நிருபர்களிடம் பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
  • இலவச அரிசி திட்டத்திற்கு தமிழக அரசுக்கு பாராட்டு.
  • இலங்கை மீது பொருளாதாரத்தடைக்கோரி தீர்மானம் ! தமிழக அரசிற்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் பாராட்டு ! கட்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசிற்கு கோரிக்கை .
  • SDPI- ன் மூன்றாம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு 1 லட்சம் மரக்கன்றுகள் நடத்திட்டம் .
  • குறைகளை நீக்கிவிட்டு சமச்சீர் கல்வியை உடனே அமுல்படுத்த வேண்டும் .
  • அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
  • லோக்பால் மசோதாவை வாக்குறுதியளித்தபடி மத்திய அரசு ஜூலை 30க்குள் நிறைவேற்ற வேண்டும்.
  • ஊழலை பற்றி பேச B.J.P-க்கு அருகதையில்லை .
  • தமிழகத்தில் ஊழலைக் கட்டுப்படுத்த லோக் அயுக்தாவை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.
(1) வரும் ஜுன் 21அன்று SDPI துவங்கி 2ஆண்டுகள் முடிந்து 3 ஆம் ஆண்டு துவங்குகிறது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1இலட்சம் மரக்கன்றுகள் நடுவதென தீர்மானித்துள்ளோம். கொடியேற்று நிகழ்ச்சிகள் நடத்தவும் தீர்மானித்துள்ளோம்.

(2) புதிதாக ஆட்சிபொறுப்பை ஏற்றிருக்கும் அதிமுக அரசு அமுல் படுத்தியுள்ள இலவச அரிசிதிட்டத்தை முழுமனதோடு வரவேற்கிறேன். இதற்காக தமிழக அரசை பாரட்டுகிறேன்.
அதே நேரம் இதன் முழுப்பயனும் மக்களுக்கு போய் சேரவேண்டும்.எனவே கடத்தல் காரர்கள் அரிசிக்கடத்தலில் ஈடுபடாமல் இரும்பு கரம் கொண்டு தடுத்திட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

(3) ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்குற்ற நடவடிக்கைளில் ஈடுபட்ட இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்கக்கோரும் தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழக அரசுக்கும் ஏகமனதாய் தீர்மானம் நிறைவேற துணை நின்ற அனைத்து கட்சி களுக்கும் குஈகஐ சார்பாக பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதோடு கட்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததால் தமிழக மீனவர்களுக்கு பெரும் பாதிப்பும் அநீதியும் ஏற்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொண்டு உடனே கட்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

(4) சமச்சீர்கல்வி திட்டம் என்பது பல்லாண்டுகளாக கல்வியாளர்கள்,சமுக நல அமைப்புகள், மாணவர்களால் போராடி வலியுறுத்தி கொண்டு வரப்பட்ட கல்வித் திட்டமாகும். இதை தமிழக அரசு ரத்து செய்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் சமச்சீர் கல்வியை அமுல்படுத்த உத்தரவிட்டுள்ளது.உச்ச நீதிமன்றம் இது பற்றி ஆய்வு செய்ய கமிட்டி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களின் நலன்கருதி ஏற்கனவே அமுலில் இருந்த சமச்சீர்கல்வி பாடதிட்டத்தில் உள்ள சில குறைகளை நீக்கிவிட்டு குறிப்பாக சிறுபான்மை மொழிகளான உருது மொழி போன்றவற்றிர்க்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை களைந்து சமச்சீர் கல்வியை முழுமையாக அமுல்படுத்த தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

(5) ஊழலுக்கு எதிராக அனைத்து மக்களும் கிளர்ந்தெழ வேண்டும். அதே நேரம் ஊழலுக்கு எதிரான போராட்டங்களை அரசியலாக்குவதை வண்மையாக கண்டிக்கிறேன். குறிப்பாக B.J.P ஊழலுக்கு எதிரான போரட்டங்களை அரசியலாக்குகிறது. ஊழலை பற்றி பேச ஆ.ஒ.க க்கு எந்த அருகதையும் இல்லை.

லோக்பால் மசோதாவை மத்திய அரசு உறுதியளித்ததை போன்று ஜூலை 30 க்குள் நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

(6) மாநில அளவில் நடைபெறும் அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளையும் விசாரிப்பதர்காக ஏற்படுத்தப்பட்ட லோக்அயுக்தா பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இதை தமிழக அரசு உடனடியாக தமிழகத்தில் ஏற்படுத்த தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இது சம்பந்தமாக தமிழக அரசை வலியுறுத்தி ஜூலை 7ஆம் தேதி அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் கவன ஈர்ப்பு ஆற்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

(7) தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணயக்கமிட்டி ஆணையர் நீதிபதி ரவிராஜபாண்டியன் தனியார் பள்ளி கல்வி நிலையங்களுக்கான கட்டண விபரங்களை அறுவித்துள்ளார். கடந்த முறை ஆணையராக இருந்த கோவிந்த ராஜன் கமிட்டி பரிந்துரையை விட அதிக கட்டணம் நிர்ணயித்திருப்பது நடுத்தர மக்களை வெகுவாக பாதிக்கும் . ஆனால் ரவிராஜ பாண்டியன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார்

(8) பள்ளிகள் அதிக கட்டணம் வ‘லிக்கின்றன. தமிழக அரசு இதை வேடிக்கை பார்க்காமல் அதிக கட்டணம் வ‘லிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவிராஜ பாண்டியன் கமிட்டி பரிந்துரைத்த கட்டண விபரங்களை பெற்றோர்களும் பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் விதத்தில் அந்தந்த பள்ளிகள் முன்பு அனைவருக்கும் தெரியும் படி அறிவிப்பு பலகையில் வெளியிட அரசு உத்திரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

(9) தான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களுக்கான இட ஒதிக்கீட்டை உயர்த்துவேன் என வாக்களித்தார் தமிழக முதல்வர் அவர்கள். கவர்னர் உரையில் அதற்கான அறிவிப்பு வருமென எதிர்பார்த்தனர் தமிழக முஸ்லிம்கள். ஆனால் இடம் பெறவில்லை தமிழக முதல்வர் அதற்கான அறிவிப்பை உடனே வெளியிட வேண்டுமென கோருகிறேன்.
பேட்டியின் போது SDPI- ன் மாநிலச் செயலாளர் ஜி.அப்துல் சத்தார் ,மாநில பொருளாலர் எ.அம்ஜத் பாஷா ,வட சென்னை மாவட்டத்தலைவர் எஸ். அமீர் ,தென் சென்னை மாவட்டத்தலைவர் ப.முகம்மது உசேன் ஆகியோர் உடனிருந்தனர்.

0 Reactions to this post

Add Comment

    Post a Comment