Wednesday, July 27, 2011

////

உணர்வற்ற உணர்வு(!) இதழின் அவதூறும் - மறுப்பும்

சமுதாயத்தில் குழப்பம் செய்வதையும், சமுதாய தலைவர்கள், இயக்கங்கள் மற்றும் கட்சிகள் மீது அவதூறு சகதியை அள்ளி இறைப்பதை மட்டுமே தனது தொழிலாகக் கொண்டு வெளிவரும் சமூக, சமுதாய உணர்வற்ற உணர்வு(!) இதழ் தனது ஜுலை 15-21 இதழில் வழக்கம் போல் ஈனத்தனமாக ஓர் செய்தியை வெளியிட்டுள்ளது.

போதை பொருள் கடத்திய போராளிகள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அச்செய்தியில் SDPI ன் மீது அவதூறை அள்ளி வீசி தனது அரிப்பை தீர்த்துள்ளது உணர்வு(!).

உண்மையில் என்ன நடந்தது என்று நாம் விசாரித்த போது கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பிரவுன் சுகர் கடத்திய 3 பேரை காவல்துறை கைது செய்தது. ஹாரிஸ் என்பவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.

இந்த ஹாரிஸ் என்பவர் SDPI ன் சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் ஒரு பஞ்சாயத்தில் ஒரு வார்டில் போட்டியிட்டார் என்பதை தவிர SDPI ன் எந்த பொறுப்பையும் வகிக்காதவர். உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின் SDPIன் எந்த பணிகளிலோ, நிகழ்ச்சிகளிலோ அவர் ஈடுபடவுமில்லை என்பதோடு அவரின் தவறான நடவடிக்கைகள் தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 6 மாதங்களுக்கு முன் SDPI ன் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

இந்த சம்பவம் நடந்ததும் கேரளாவில் SDPI க்கு எதிராக வரிந்து கட்டி செய்தி வெளியிடும் தமிழகத்தின் தினமலர் போன்ற “மாத்ரு பூமி மற்றும் உணர்வை” போன்ற சில இதழ்கள் இந்த சம்பவத்தை SDPI யோடு சம்பந்தப்படுத்தி செய்தி வெளியிட்டன.

உடனே இது சம்பந்தமாக பாலக்காடு மாவட்ட SDPI செயலாளர் அப்துல் ரஷீது, ஹாரிஸ் SDPI ல் இருந்து 6 மாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்டவர் என்பதையும் உள்ளாட்சி தேர்தலுக்கு பின் SDPI யின் எந்த நிகழ்ச்சிகளிலும், பணிகளிலும் அவர் ஈடுபடவில்லை என்பதை குறிப்பிட்டு பத்திரிகை செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்தார். இதன்பிறகு தங்கள் அவதூறுகளை ஊடகங்கள் நிறுத்திக் கொண்டன.

இவ்வழக்கை விசாரித்து வரும் மலப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கே.சேதுராமனிடம் நிருபர்கள் ஹாரிசுக்கும், SDPI க்கும் உள்ள தொடர்பு பற்றி கேள்வியெழுப்பிய போது ஹாரிஸ் 6 மாதத்திற்கு முன்பே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது தனது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் SDPI க்கும் நடந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்தச் செய்தியும், SDPI யின் மறுப்பும் “தேஜஸ்” நாளிதழில் வந்த செய்தியும் நகலாக அருகே தரப்பட்டுள்ளது.

மாத்ருபூமி நாளிதழ் தமிழகத்தின் தினமலரை போல சிறுபான்மை சமூகத்திற்கெதிராக, குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்திற்கெதிராக அவதூறுகளை அள்ளித்தெளிக்கும் நாளிதழ்.

சங்பரிவார்கள்,அவர்களை சேர்ந்த ஊடகங்கள் மற்றும் உளவுத்துறையினரின் கூற்றை பின்பற்றி சமுதாய அமைப்புகளையும், அதன் தலைவர்களையும் தீவிரவாதிகள் எனக் காட்டிக் கொடுக்கும் அமைப்பின் உணர்வு இதழ் மாத்ரு பூமியின் செய்தியை ஆதாரமாக கொண்டு செய்தி வெளியிட்டதில் ஆச்சரியமில்லை.

பல்லாயிரக்கணக்கான பஞ்சாயத்துகளில் ஒரு பஞ்சாயத்தின் ஒரு வார்டில் SDPI சார்பாக போட்டியிட்டவர் என்பதை தவிர வேறு எந்த பொறுப்பையும் வகிக்காத, ஆறு மாதங்களுக்கு முன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட, கடந்த ஆறு மாதமாக கட்சியின் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாத ஒருவரை SDPI யின் முக்கிய பிரமுகர் என்று குறிப்பிட்டதன் மூலம் உணர்வின் காழ்ப்புணர்வை நாம் தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் எந்த முஸ்லிம் அரசியல் கட்சிகளும், எந்தக் கட்சிகளின் ஆதரவுமின்றி தனித்து நின்று வாங்க முடியாத வாக்குகளைத்தான் முஸ்லிம் உறுப்பினர்களை அதிகமாகக் கொண்ட SDPI பெற்றுள்ளது.

“ம.ம.க வின் வெற்றியை சிறுமைப்படுத்துவதற்காக” தனது இதழிலேயே “ம.ம.க வை மிஞ்சியது SDPI” என கட்டுரை வெளியிட்ட உணர்வு, இந்த கட்டுரையில் தமிழகத்தில் SDPI போட்டியிட்டு டெபாசிட் இழந்தது என குறிப்பிட்டு சிறுமைப்படுத்த முயற்சித்ததின் மூலம் தனது குள்ள நரித்தனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

SDPI போட்டியிட்ட எந்த தொகுதிகளிலும் இஸ்லாமிய ஆட்சியை அமைக்க தங்களுக்கு வாக்களியுங்கள் என கோரவுமில்லை, அது SDPI ன் கொள்கையுமில்லை.

SDPI அனைத்து ஒடுக்கப்பட்ட சமூக மக்களையும், சிறுபான்மை சமூக மக்களையும் ஒருங்கிணைத்து பயணிக்கும் கட்சி என்கிற வகையில் ஒரு கிருஸ்துவரை வேட்பாளராக நிறுத்தியதில் எந்த ஆச்சரியமுமில்லை.

இவர்களின் அமைப்பை சார்ந்தவர்களின் மீது மட்டுமல்ல, தலைவர்களின் மீதே பாலியல், கொலை, காட்டிக் கொடுத்தல், மோசடி என எண்ணற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவர்களாலேயே அவர்கள் அமைப்பின் முன்னாள் தலைவர்கள், பிரமுகர்கள் மீது (அமைப்பில் செயல்பட்ட காலத்தில்) சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகள் ஏராளம்.

மேட்டுப்பாளையத்தில் இவர்களின் மாவட்டத்தலைவரும், மாநில செயற்குழு உறுப்பினருமான அப்துல் ரஷீது என்பவர் சில மாதங்களுக்கு முன் அடுத்தவர் மனைவியை கடத்தி சென்ற போது கூட, அது அவரின் தனிப்பட்ட தவறு என்றுதான் என அனைத்து அமைப்புகளும் அமைதி காத்தன.

எனவே பிறர் மீதோ, பிற அமைப்புகள் மீதோ குற்றம் சாட்டும் தகுதி தனக்குள்ளதா என்பதை உணர்வும், அதைச் சேர்ந்த இயக்கமும் உரசிப் பார்க்கட்டும். அவர்கள் திருந்த வேண்டும். இல்லையேல் திருத்தப்படுவார்கள், தமிழக மக்களால் அப்புறப்படுத்தப்படுவார்கள். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என நம்புவோம்!

- சிக்கந்தர்
நன்றி: புதிய பாதை

0 Reactions to this post

Add Comment

    Post a Comment