திருபுவனத்தில் தி.மு.க கூட்டணி மற்றும் அ.தி.மு.க கூட்டணி ஆகியவற்றிற்கிடையே பா.ம.க தனித்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளது. இதனிடையே திருபுவனத்தில் SDPI–ன் எழுச்சி இருபெரும் கூட்டனிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க, அ.தி.மு.க கூட்டணி கட்சிகள் கூட்டணி குழப்பத்தில் இருக்கும் சமயத்தில் SDPI–ன் செயல்வீரர்கள் தனியே தேர்தலை சந்திக்க அழகாகத் திட்டமிட்டுள்ளனர்.
திருபுவனத்தில் 2,3,4,5,8 மற்றும் 9 ஆகிய வார்டுகளிலும் பேரூராட்சி தலைவர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.
பேரூராட்சி தலைவர் பதவிக்கான SDPI–ன் வேட்பாளராக திருபுவனம் கிளைத்தலைவர் முகம்மது அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருபுவனத்தில் SDPI–ன் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.சாதாரணமாகவே மக்கள் சேவையில் ஆர்வமாக ஈடுபடும் இவர் பேரூராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என பலர் கருதுகின்றனர். மேலும் இவர் விவசாயிகள் சங்கத் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருபுவனத்தில் பெரும்பான்மையாக வாழும் சௌராஷ்டிரா சமூக மக்களுக்கும் இவர் நன்கு பரிசட்சயமானவர் என்பதால் தி.மு.க, அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வாசகர்களின் மேலான கருத்துகளை எதிர்பார்கின்றோம்....
4 Reactions to this post
Add Commentsuper valthukkal
insha allah vetri namatha................
வெற்றி பெற வாழ்த்துக்கள்
Post a Comment