Saturday, July 9, 2011

////

தென்சென்னை மாவட்டம் SDPI சென்னயில் ஆர்ப்பாட்டம்!

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா-வின் தென் சென்னை மாவட்டம் சார்பாக லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் 07.07.11 மாலை 4.30 மணிக்கு சைதாபேட்டை பனகல் மாளிகை அருகே நடைபெற்றது.

சைதாபேட்டை தொகுதி தலைவர் முஹம்மது அனீஸ் அவர்கள் தலைமை தாங்கினார். தென் சென்னை மாவட்ட தலைவர் P . முஹம்மது ஹுசைன் அவர்கள் கவன ஈர்ப்பு உரையாற்றினார். இறுதியில் சைதாபேட்டை தொகுதி செயலாளர் அப்துல் மஜீத் அவர்கள் நன்றியுரையற்றி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்.ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய தென்சென்னை மாவட்டத் தலைவர் P.முஹம்மது ஹுசைன் அவர்களின் உரை சூழ்ந்திருந்த பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இந்த ஆர்பாட்டாத்தில் பெரும் திரளான பொது மக்களும் SDPI - யின் நிர்வாகிகளும் செயல்வீரர்களும் கலந்து கொண்டனர்.

0 Reactions to this post

Add Comment

    Post a Comment